Shop Now With 50% Off

Fig Cultivation

green fruit on green leaves
green fruit on green leaves

Fig Cultivation ( அத்தி பழம் சாகுபடி )

- May 02, 2023

அத்திபழம் சாகுபடி தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. காரணம் அத்தி பழம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதில் கிடைக்கும் வருமானம் ஆகும். அதிக லாபம் தரும் அத்திபழம் பற்றி பார்போம்..


நிலம் தேர்வு : அத்தி பழத்தில் பல்வேறு ரகங்கள் உள்ளது.அதில் குறிப்பாக பூனா ரெட், டர்க்கி பிரவுன் போன்ற ரகங்கள் அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. நிலத்தை நன்கு உழவு செய்து அத்தி பழத்தை நடவு செய்யலாம்.

இடைவெளி : அத்தி பழத்தை நடவு செய்ய 6 × 6 என்ற இடைவெளி யில் ஏக்கருக்கு 1200 செடிகள் வீதம் நடவு செய்யலாம்.

தண்ணீர் தேவை : அத்திபழ சாகுபடி க்கு சொட்டு நீர் பாசனம் உகந்தது. தினமும் இரண்டு முறை என முதல் இரண்டு மாதங்களுக்கும் பிறகு ஒரு முறை யும் நீர் தேவைப்படுகிறது.

பூச்சி மற்றும் நோய் : பூனா டெட் ரகத்தில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கிடையாது.

நடவு செய்ய ஆகும் செலவு :

நாங்கள் ஏக்கர் கணக்கில் நடவு செய்து தருகிறோம். ஏக்கருக்கு 1200 செடிகள் , இயந்திரத்தின் மூலம் குலி எடுத்து அதற்கு அடி உரமும் இட்டு , சொட்டு நீர் பாசனத்திற்கு தேவையான பைப் நீங்கள் வாங்கி கொடுத்தால் அதனை அமைத்து கொடுக்கின்றோம். இவை அனைத்தும் சேர்த்து ஒரு செடி ₹ 120 ஆகின்றது. இது நிரந்தர விலை கிடையாது.