Shop Now With 50% Off

Dragon fruit cultivation

டிராகன் பழம் ஏக்கருக்கு எவ்வளவு செலவு


டிராகன் பழம் சாகுபடி தற்போது தமிழ் நாட்டில் அதிகரித்து வருகிறது. காரணம் மக்களிடையே டிராகன் பழத்தை பற்றிய விளிப்புணர்வு. அதிக லாபம் தரும் டிராகன் பழம் இதில் பல்வேறு ரகங்கள் உள்ளது . குறிப்பாக மொராக்கோ' , ஜியாம் ரெட், தைவான் பிங்க், ஜம்போ போன்றவைகள் ஆகும்.


மண் :

மண் களிமண்ணை தவிர அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது . தண்ணீர் தேங்கி நிர்க்கக் கூடாது.

காலநிலை :

எந்த பருவம் மற்றும் காலநிலை யிலும் வளரக்கூடியது.

நடவு :

ஏக்கருக்கு 10 × 8 இடைவெளி யில் 500. தூண்கள் நடவு செய்ய வேண்டும். ஒரு தூணுக்கு 4 செடிகள் என ஏக்கருக்கு 2000 செடிகள் தேவை.

தண்ணீர் :

டிராகன் பழத்திற்கு தண்ணீர் தேவை மிகவும் குறைவு, ஆறுமாதம் வரை வாரத்திற்கு நான்கு முறையும் மேல் இரண்டு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.சொட்டு நீர் உகந்தது.

அறுவடை:

நடவு செய்ததில் இருந்து 14 மாதத்திற்கு பிறகு அறுவடைக்கு வர தொடங்கும். ஏக்கருக்கு முதல் வருடத்தில் ஒரு டன் கிடைக்கும். 2 மற்றும் 3 வருடத்தில் 8 முதல் 10 டன் கிடைக்கும்.


நடவு செய்ய ஆகும் செலவு :

ஒரு தூண் செட் மற்றும் நான்கு செடிகள் , தூணை நடவு செய்தல் , தூணுக்கு மண் அனைத்தல் , செடி நடவு செய்தல் , செடிக்கான உரம் என அனைத்தையும் சேர்த்து ₹1450 ஒரு தூணுக்கு ஆகின்றது. சொட்டு நீர் பைப் நீங்கள் வாங்கி கொடுத்தால் அதனை இலவசமாக மாட்டி கொடுப்போம்.

விற்பனை :

உங்கள் அருகில் உள்ள சந்தையில் விற்பனை செய்யலாம் அல்லது பெரிய சந்தையில் செய்யலாம் , வியாபாரிகளிடம் சொன்னால் நேரடியாக தோட்டத்தில் எடுத்துக் கொள்வார்கள்.நாம் நடவு மற்றும் செய்து தருவோம் .